வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை வங்கி கணக்கில் செலுத்தாமல், ரேசன் கடைகள் மூலம் நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மேலும், "நிவாரணங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது பயனாளிகள் தாங்கள் சார்ந்த சங்கங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்படாது. நேரமும் மிச்சமாகும். மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்" என சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த யோசனை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“