கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் பூண்டி பகுதியில் உள்ள 7 வது உச்சி மலையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் மலையில் வீற்றிருக்கும் வெளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை வனத்துறை அனுமதி அளித்து வந்தது.
இதனிடையே கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வெள்ளியங்கிரி மலை ஏற பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 6 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போது பிப்ரவரி முதல் மே வரை 4 மாதங்களுக்கு வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேற்று வனத்துறை முன்னிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற கதவுகள் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“