scorecardresearch

கேன் குடிநீர் விநியோகிக்கும் முன் அறிக்கை வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Chennai Tamil News: கேன்களில் விநியோகிக்கும் தண்ணீரின் சுகாதாரத்தைக் குறித்து அறிக்கை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Madras High Court refuses to quash property tax hikeசொத்து வரி உயர்வு, தமிழ்நாடு அரசு, நீதிபதி அனிதா சுமந்த், சென்னை உயர் நீதிமன்றம், திமுக, Increase in Property Tax, Government of Tamil Nadu, Justice Anita Sumant, Madras High Court, DMK
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Chennai Tamil News: கேன்களில் விநியோகிக்கும் தண்ணீரின் சுகாதாரத்தைக் குறித்து அறிக்கை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கேன்களில் குடிநீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள், காலாவதியின் குறியீடுகள், பிளாஸ்டிக்கை மறுசுழச்சிற்கும் முறை ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தமிழக அரசிற்கு சொந்தமான பால் விநியோக நிறுவனம் ஆவின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, பாட்டில்கள்/டெட்ராபேக்குகளில் பால் வழங்குவது தொடர்பான விரிவான அறிக்கையையும் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான விசாரணைக்கு உதவுமாறு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை ஆணையரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் குடிநீரானது சுற்றுச்சூழலின் நல்வாழ்வுக்கு மட்டுமின்றி, சுகாதாரத்தின் தரத்தையும் பாதிக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

குடிநீருக்கு நிலையான காலாவதி காலம் இல்லை என்றாலும், தண்ணீரை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களின் ஆயுட்காலம், குறைவாகவே உள்ளது. தரமற்ற தண்ணீர் பாட்டிலில் நீண்ட நேரம் தண்ணீரை சேமித்து வைப்பதால், பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீருடன் கலக்கிறது. இதனால், நல்ல தண்ணீர் கூட விஷமாக மாறுகிறது.

அனைத்து பொது இடங்களிலும் குடிநீர் விநியோகிப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தாமல், அதற்கான மாற்று வழியை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்.

அதேபோல, உயிருக்கு மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் வாட்டர் கேனைப் பயன்படுத்துவது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது.

பாக்கெட்டுகளுக்குப் பதிலாக பாட்டில்களில் பால் வழங்க ஆவினிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தை தொடங்குவதற்கு முன், கூடுதல் கட்டணம் செலுத்தி பாட்டில்களில் பால் வாங்குவதற்கு நுகர்வோரின் விருப்பத்தை தெரிந்துகொள்ளலாம் அல்லது பாக்கெட்டுகளில் பால் விநியோகத்தை ஒழிக்க கால அவகாசம் வழங்கலாம். 

ஆவின் ஆபத்தில்லாத டெட்ரா பேக்குகளில் பாலை சந்தைப்படுத்துவது பற்றி யோசிக்கலாம் என்ற ஆலோசனையையும் உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

இதேபோல், இப்போது சாச்செட்டுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் உண்ணக்கூடிய பொருட்களின் விநியோகம், மேலே பரிந்துரைக்கப்பட்டபடி மாற்றுகளிலும் பேக் செய்யப்படலாம் என்று உயர்நீதி மன்றம் கூறியது. மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai high court asks company to report about sanitation

Best of Express