சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து மழை அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து, தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளையும் நிவாரணங்களையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சென்னையில்2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் என்று எச்சரிக்கை தெரிவித்தனர்.
2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"