Advertisment

பிகில் திட்டமிட்டபடி வெளியாகுமா? புதிய வழக்குக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

Bigil movie story patent : பிகில் பட கதை காப்புரிமை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர உதவி இயக்குனர் செல்வாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, chennai high court, bigil, bigil movie, vijay in bigil. bigil movie story, story patent, director selva, atlee, case

chennai, chennai high court, bigil, bigil movie, vijay in bigil. bigil movie story, story patent, director selva, atlee, case, சென்னை உயர்நீதிமன்றம், பிகில், நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ, பிகில் பட கதை, கதை காப்புரிமை, இயக்குனர் செல்வா, வழக்கு

பிகில் பட கதை காப்புரிமை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர உதவி இயக்குனர் செல்வாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisment

நடிகர் விஜய் நடித்து, அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, படத்தின் கதை தன்னுடைய கதை என்பதால் படத்துக்கு தடை விதிக்க கோரி உதவி இயக்குனர் செல்வா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பட இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை நிராகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்கு தொடர அனுமதி கோரியும் செல்வா தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது. புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து செல்வா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தாக்கல் செய்யும் வழக்கை சட்டப்படி விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Chennai High Court Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment