அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ அளித்த புகாரின் பேரில் சி.வி.சண்முகத்துக்கு எதிராக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'வி.ஏ.ஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த வழக்கில் சரியான பிரிவுகள் சேர்க்கவில்லை, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதை நிரூபிக்கவில்லை, ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது, எஃப்.ஐ.ஆரில் குறைபாடுகள் உள்ளன' என்று கூறி சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“