Advertisment

குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா? காவலர்களுக்கு இல்லையா? - ஐகோர்ட்

காவலர்களின் குறைகளை கலைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா? காவலர்களுக்கு இல்லையா? - ஐகோர்ட்

காவலர்களின் குறை தீர்க்க நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க 6 ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும் அமைக்காது ஏன் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நிபுணர்கள் குழு பட்டியலை வரும் வியாழக்கிழமைக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

காவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துத்துவர்கள் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் 2012 ஆம் ஆண்டின் உத்தரவை நடைமுறை படுத்தக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது குழு அமைக்கப்பட்டது தொடர்பான அறிக்கை இன்று (19.03.2018) தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிபுணர்கள் குழு அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த 12 ஆம் தேதி டி.ஜி.பி தமிழக உள்துறைச் செயலாளர்க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி கிருபாகரன், காவல்துறையினர் பிரச்சனைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் இன்னும் ஏன் அமைக்கவில்லை? கடந்த முறை விசாரணைக்கு வந்த போதே குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டேன். ஆனால் இதுவரை குழு அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளதாது கண்டனத்திற்கு உரியது என்றார். காவலர்களுக்கான பணி நேரம் இல்லாது அவர்களை மனதளவில் மிகவும் சேர்வடைய செய்வதாகவும், காவலர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூட விடுமுறை கிடைப்பதில்லை இதற்கு அதிக வேலை பலுதான் காரணம் கிருபாகரன் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா? காவலர்களுக்கு இல்லையா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். காவலர்களுக்கு பணி நேரம் என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை. காவலர்கள் மன உளைச்சல் காரணமாகவே தங்களது கோபத்தை வெளிப்படுத்தவே, அப்பாவிகளை அடிக்கிறார்கள் என கூறிய நீதிபதி, அண்மையில் திருச்சியில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மீது அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர் என்றார். ஹெல்மட் அணியாமல் சென்றதும், அப்போது காவலர் வண்டியை நிறுத்திய போது  நிறுத்தாமல் சென்றது தவறுதான் என்பதை யாரும வாய் திறக்க மறுக்கின்றனர். இது போன்ற சம்பவம் ஏற்பட காவலர்களின் வேலை பழு மற்றும் மன அழுத்தும் ஒரு காரணம். இதனால் காவலர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு பணிக்கு மணிகணக்கில் நிற்கவைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இயற்கை உபாதைக்கு எங்கே செல்வார்கள்? இதுவும் ஒரு வகையிலான மன அழுத்தம் தான். காவல்துறையினர் பொம்மைகள் அல்ல என்றும் அவர்களை பொது சேவையாற்ற வேண்டும் நோக்கில் தான் பணிக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

காவல்துறையினர் வேலைப் பழுவிற்கு உயர் அதிகாரிகளும் சில இடங்களில் காரணமாக உள்ளனர் என தெரிவித்த நீதிபதி கிருபாகரன் உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரின் வீடுகளின் பணிக்கு அனுப்படுகின்றனர். இந்த ஆர்டர்லி முறை கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் ஓழிக்கபட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க 1979 ஆம் ஆண்டு அரசு அரசாணை பிறபித்தும் இன்றுவரை காவல்துறை பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் வீடுகளில் காவலர்கள் பணியமர்த்தப்படுவது ஏன் எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். உயர் அதிகாரிகளின் வீடுகளில் 10 முதல் 20 காவலர்கள் இது போன்று பணியில் இருப்பதாகவும் கிருபாகரன் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, எத்தனை பேர் தற்போது உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? என்பதனை அரசு அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும்.

ஆர்டர்லி முறை ஒழிக்கபட்டு விட்டதாக பிறப்பிக்கபட்ட அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

காவலர்களின் குறைகளை கலைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் உத்தரவிட நேரிடும், என நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

Chennai High Court Justice Kirubakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment