தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும் இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மேலும் துப்பாக்கி சூடு சம்மந்தமான வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க உத்தரவிட கூடாது எனவும் நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரனை, காவல் துறையின் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலான்வு விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டன.
இந்த அனைத்து வழக்குகளும் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதனால் மாநில காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொல்ல ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்து வழக்கு மாநில காவல்துறை விசாரிக்க கூடாது வழக்கை சிபிஐ விசாரணை க்கு மாற்ற வேண்டும் என வாதிட்டனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தற்போதைய சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு உள்ளது. கலவரத்தின் போது வாகனங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். அதேசமயம், சம்பவ தினத்தன்று எடுத்த 20 நிமிட வீடியோ தொகுப்பை நீதிமன்றத்தில் திரையிட அனுமதிக்க வேண்டும். வழக்கு ஆவணங்களை பார்வையிட்ட பிறகு தற்போதைய விசாரணையில் இந்த நீதிமன்றம் திருப்தி அடையும் என்றார்.
அப்போது தலைமை நீதிபதி கலவரத்தில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இரு தரப்பினரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். நான் "டைம்ஸ் நவ்" டிவியில் பார்த்தேன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். இந்த விசயத்தில் யார் தவறு செய்திருந்தாலும், (போராட்ட காரர்கள் அல்லது அரசு அதிகாரிகள்) அவர்களும் தண்டனைக்குரியவர்கள் தான், நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே குட்கா தொடர்பான வழக்கில் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாக எழுந்த குற்றச்சாட்டில் தான் சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது குற்றம் சாட்டப்படுவதால் ஏன் சிபிஐ க்கு மாற்றக்கூடாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கு தொடர்பான வீடியோ பதிவு உள்ளிட்ட ஆதாரங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பலியானோரின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை உறவினர்கள் கோரினால் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
வழக்கின் விசாரணை ஜூலை 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.