Advertisment

திருமணமான மகன் சொத்தில் தாய்க்கு உரிமை இல்லை; தெளிவுபடுத்திய சென்னை ஐகோர்ட்

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை; மனைவி, குழந்தைகளுக்குத் தான் உரிமை உண்டு; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
TN HECE about temple hundi opening and counting of offerings  livestream Chennai HC Tamil News

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை; மனைவி, குழந்தைகளுக்குத் தான் உரிமை உண்டு; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.

Advertisment

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸூக்கும், அக்னஸ் என்பவருக்கும், 2004-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் 2012-ல் இறந்துவிட்டார். மோசஸ் தனது சொத்துக்கள் தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை.

இந்தநிலையில், மோசஸின் சொத்துக்களில் பங்கு கேட்டு, அவரின் தாய் பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில், அவரின் தாய்க்கும் பங்கு உள்ளது என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, ”வாரிசுரிமைச் சட்டம் 42-வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரது விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ குழந்தைகளோ இல்லை என்றால், தந்தை சொத்துகளுக்கு வாரிசுதாரராவார். தந்தையும் இல்லை என்றால், தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுதாரராவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ”திருமணமான மகன் இறந்த நிலையில், தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. தாய் பங்கு கேட்க முடியாது" என்று தெரிவித்த நீதிபதிகள், `தாய்க்கு பங்கு உண்டு' என்ற நாகப்பட்டின மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment