Advertisment

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகள் அவசியம்; சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் கருத்து

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Savukku Shankar HC

“மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது:” என்று சவுக்கு சங்கர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசு நிர்வாகம் குறித்த கருத்துகளை முடக்கியதால் தான் சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் விழித்துக் கொண்டு சுதந்திரம் பெற்றோம். இப்போது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என சவுக்கு சங்கர் வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர். மேலும், வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று தெரிவித்தனர்.

சவுக்கு சங்கர் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். அதாவது, “அரசு நிர்வாகம் குறித்த கருத்துகளை முடக்கியதால் தான் சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் விழித்துக் கொண்டு சுதந்திரம் பெற்றோம். இப்போது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா?” என கேள்வி காவல்துறைக்கு எழுப்பியுள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும்  “சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது” நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது:” என்று சவுக்கு சங்கர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment