சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிஷ்டவசமானது. இந்த காலியிடங்களுக்கான இணை பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், சட்ட கல்லூரிகளை முடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றுமு் கல்லூரிகளில் பேராசியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாதது குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 2018-ம் ஆண்டு, வசந்த குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில், உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படமல் உள்ளது என்று கூறியிருந்தார்.
கடந்த 6 வருடங்களாக இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த மனுவுக்கு சட்டக்கல்லூரி இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 15 சட்டக்கல்லாரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர்களின் பணியிடங்களில் 19 இடங்கள் காலியாக உள்ளது. 206 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை பார்த்த நீதிபதி இதன் மூலம் சட்டக்கல்லூரிகளில் உள்ள அனைத்து பணியிடங்களுமே காலியாக உள்ளது தெரிகிறது.
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கு இப்படிப்பட்ட ஒரு பதில் மனு தாக்கல் செய்திருப்பது துரதிஷ்வசமானது. உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் இல்லாத சூழ்நிலையில், மாணவர்கள் எப்படி கல்வி கற்க முடியும்? எப்படி மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்றுதர முடியும்? இந்தமாதிரியான செயல், சட்டம்படித்து எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்ற அடுத்த தலைமுறையினரை அழித்துவிடும்.
முறையாக தகுதியான பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், சட்டக்கல்லூரிகளை நடத்தி எ்னன பயன்? இதனால் சட்டக்கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாமா? இந்த நிலை தொடர்ந்தால் மாணவர்களின் நலன் பழாகிவிடும். ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த, ஆசிரியர்களையும் கவுரவ விரிவுரையாளர்களையும் நியமித்து பாடம் நடத்த வேண்டும். இது தொடர்பாக சட்டத்துறை செயலாளர் அக்டோபர் 15-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“