Advertisment

ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் முன்னாள் ஆணையருக்கு ஜாமீன்! பொன்.மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் கண்டனம்

நேரடியாக கைது செய்து பத்திரிகை, ஊடகங்களில் வெளியிடுவதை பார்க்கும்போது, விளம்பரத்திற்காக செயல்படுவதுபோல் தோன்றுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
senthil balaji plea dismissed against karur EC Officer - தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

senthil balaji plea dismissed against karur EC Officer - தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

காஞ்சிபுரம் கோவில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனர் வீரசண்முகமணிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் ஐம்பொன் சிலை சேதம் அடைந்ததையொட்டி புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது. இப்படி பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஐ.ஜி.-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையரான வீரசண்முகமணியை மார்ச் 15 ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கோரி வீரசண்முகமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்தார் அதில், தனக்கு எதிரான குற்றசாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 2017 ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றுவிட்டதாகவும், பணியிலிருந்த காலத்தில் 38 ஆயிரம் கோவில் தன் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், ஆணையர் என்ற முறையில் புதிய பஞ்சலோக சிலைக்கு ஒப்புதல் கொடுத்ததாகவும் வீரசண்முகமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில், வீரசண்முகமணிக்கு தெரியாமல் தங்கமே இல்லாமல் ஐம்பொன் சிலையை செய்திருக்க முடியாது என்றும், 2 கோடியே 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் மாயமானது குறித்து உண்மையை கண்டறிய வேண்டும் என்பதால், விதிகளையும் பின்பற்றிதான் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை நடத்தாமல் விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், சந்தேகத்திற்கிடமானவர்களை அழைத்து விசாரிப்பதற்கு பதிலாக, நேரடியாக கைது செய்து பத்திரிகை, ஊடகங்களில் வெளியிடுவதை பார்க்கும்போது, விளம்பரத்திற்காக செயல்படுவதுபோல் தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கில் ஏற்கனவே கைதான கூடுதல் ஆணையருக்கு ஜாமீன் வழங்கபட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வீரசண்முகமணிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டுமென வீரசண்முகமணிக்கு நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் வழக்கமான நடைமுறையை பின்பற்றி விசாரணை நடத்தவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Chennai High Court Pon Manikkavel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment