தமிழ்நாட்டில் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கு காரணமாக வழங்கப்படாத ஓய்வு கால பலன்களை வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதே போல, அரசு ஊழியர்கள் தொடர்ந்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கு சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தனர். அவசியம் இல்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீண்ட காலம் நிலுவையில் இருக்கும் வழக்குகள் ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாது என்றும் ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளுக்கு நிலுவையில் வைத்திருந்தால், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளது.
மேலும், கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"