/tamil-ie/media/media_files/uploads/2018/07/bike-stunt.jpg)
பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து சீர்திருத்த நடவடிக்கை எடுங்கள்; சென்னை ஐகோர்ட் கருத்து (கோப்பு படம்)
பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, அவர்களைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ”பைக் ரேஸ், பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
இந்த இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும்” எனக் கூறி, விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us