கொரோனா அச்சுறுத்தல்; செய்தித்தாள் வெளிவர தடை கோரி வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கொரோனா அச்சுறுத்தல் விலக்கிக் கொள்ளபடும் வரை தினசரி செய்தித்தாள் வெளிவர தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் விலக்கிக் கொள்ளபடும் வரை தினசரி செய்தித்தாள் வெளிவர தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court dismiss plea, high court dismiss plea to stop news papers untill coronavirs, கொரோனா அச்சுறுத்தல், சென்னை உயர் நீதிமன்றம், செய்தித்தாள், தடைகோரி வழக்கு, covid-19 pandemic threaten to end, chennai high court, tamil nadu news, latest corona news

chennai high court dismiss plea, high court dismiss plea to stop news papers untill coronavirs, கொரோனா அச்சுறுத்தல், சென்னை உயர் நீதிமன்றம், செய்தித்தாள், தடைகோரி வழக்கு, covid-19 pandemic threaten to end, chennai high court, tamil nadu news, latest corona news

கொரோனா அச்சுறுத்தல் விலக்கிக் கொள்ளபடும் வரை தினசரி செய்தித்தாள் வெளிவர

Advertisment

தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தற்பொழுது நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளதாகவும். இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தற்போதைய நிலையில் தினசரி செய்தித்தாள் மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. மேலும் ஊரடங்கு தடை உத்தரவு காலத்தில் செய்தித்தாள் வெளிவர விலக்கு அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் விலக்கி கொள்ளும் வரை தமிழகத்தில் அனைத்து வரை செய்தித்தாள்கள் வெளிவர தடை விதிக்க செய்தி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள் நிறுவனங்கள் இணையத்தளங்கள் இணையத்தள மூலமாக செய்திகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ரமேஷ் செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளாதல் இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

Advertisment
Advertisements

அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆரம்பகட்ட ஆய்வுகளில் மனுதார் கூறுவது போல் செய்தித்தாள் கொரோனா பரவுதான குற்றச்சாட்டு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற வழக்கு கோப்புகள் அனைத்தும் காகிதத்தில் தான் உள்ளது. பணமும் காகிதம் தான் அதனை அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், எந்த வகையிலும் கொரோனா பரவலாம். காகிதத்தின் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரம் இல்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிகள் மனுதாரர் கூறியது போல் கொரோனா வைரஸ் காகிதத்தின் மூலம் பரவுவதாக எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. எனவே செய்தித்தாள் வெளிவர தடை விதிக்கக் கோரிய மனுவை ஏற்க முடியாது. மேலும், மத்திய அரசு அளித்த விலக்கிற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: