எண்ணெய் நிறுவனத்திடம் ரூ.2.5 கோடி இழப்பீடுகோரி நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பிரபல தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்டு, நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரபல தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்டு, நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காப்புரிமை சட்டத்தின் படி, 60 ஆண்டுகள் வரை விளம்பரத்தின் உரிமையாளர், தனது விளம்பரத்துக்கு உரிமை கொண்டாட முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வி.வி.டி. தேங்காய் எண்ணெய் நிறுவனம் கடந்த 2008 நடிகை காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் படம் தயாரித்தது. இந்த விளம்பரத்தை ஒரு ஆண்டுக்கு மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கபட்டு இருந்தது. எனினும் ஒப்பந்த காலம் முடிந்தும், அந்த நிறுவனம் தனது விளம்பரத்தை பயன்படுத்துவதாக கூறி, நடிகை காஜல் அகர்வால், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிவில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வி.வி.டி. நிறுவனத்துடன் செய்து கொண்ட விளம்பர ஒப்பந்தப்படி, ஓராண்டுக்கு தான் நடித்து கொடுத்த விளம்பரத்தை அந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அந்த காலகட்டத்துக்கு பிறகும் 3 ஆண்டுகள் வரை தான் நடித்த விளம்பரத்தை பயன்படுத்துவதால், தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவிடி கோல்டு நிறுவனம் தனக்கு 2.5 கோடியை இழப்பீடாக, வழங்க உத்தரவிட வேண்டும் மேலும் தெடர்ந்து விளம்பரம் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று நடிகை காஜல் அகர்வால் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி. ரவீந்திரன், நடிகை காஜல் அகர்வாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் தனது தீர்ப்பில், விளம்பர தயாரிப்பு நிறுவனம் தனது விளம்பரத்தை காப்புரிமை பெற்றுள்ளது. காப்புரிமை சட்டம் பிரிவு 26 படி, விளம்பரத்தின் உரிமம், அதன் தயாரிப்பாளருக்கு 60 ஆண்டுகளுக்கு உள்ளது. இதன்படி, அதன் உரிமையாளர் அந்த விளம்பரத்தை பொதுமக்கள் மத்தியில் காட்சிப்படுத்த உரிமை உள்ளது. இதன் மூலமாக மனுதார்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மனுதாரர், எண்ணெய் நிறுவனத்துடன் ஓராண்டுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்த நிபந்தனைகள், காப்புரிமை சட்டத்துக்கு மாறாக உள்ளது. அதே நேரத்தில், காப்புரிமை சட்டப்படி, விளம்பரத்தின் உரிமையாளர் தனது விளம்பரத்தை பயன்படுத்த உரிமை உள்ளது. எனவே, காஜல் அகர்வாலின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், விவிடி நிறுவனத்திற்கு வழக்கு செலவை அளிக்கவும் காஜல் அகர்வால்க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close