தமிழக அரசு பத்திரிகைகள் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

2012 மற்றும் 2013 ஆண்டுகளில் பத்திரிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று உத்தரவிட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் செய்தி நிறுவனங்கள் மீது தமிழக அரசு தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

chennai high court dismissed defamation case of tamil nadu govt, சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு பத்திரிகைகள் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து, tamil nadu govt defamation case against news papers, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, தமிழ் செய்திகள், chennai high court, chennai high court news, latest tamil nadu news, latest tamil news

2012 மற்றும் 2013 ஆண்டுகளில் பத்திரிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

2011- 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசையும், முதல் அமைச்சர், அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகள் வெளியிடும் செய்தி கட்டுரைகள், செய்திகள் மற்றும் ஆளும் கட்சியின் செயல்பாடுகள், அமைச்சர்கள் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கொடுக்கும் செய்தி, பேட்டிகள் குறித்து செய்தி வெளியிடபட்டது.

இந்நிலையில் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் பத்திரிக்கைகள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகளை தமிழ்நாடு அரசு சார்பில் சென்னைநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளில் பேட்டி, செய்தி கொடுக்கும் அரசியல் கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடரும் போது, பத்திரிக்கை நிறுவனங்கள், செய்தி ஆசிரியர்கள், கட்டுரை ஆசிரியர்கள், செய்தியாளர்களை சேர்த்தும் அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளில் வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

பத்திரிக்கையாளர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சுமார் 50 மேற்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள் மற்றும் நக்கீரன், முரசொலி, தினமலர் ஆகிய தமிழ் செய்தி நிறுவனங்கள் சார்பில் ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவதூறு சட்டத்தின்படி முதலமைச்சர், அமைச்சர் ஆகியோர்க்கு எதிரான கருத்துகளை தெரிவித்தால் அதற்காக சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் வழக்கு தொடர உரிமையில்லை. எனவே, அவர் தொடர்ந்த அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று உத்தரவிட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் செய்தி நிறுவனங்கள் மீது தமிழக அரசு தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai high court dismissed defamation case of tamil nadu govt against news papers

Next Story
பிராமணர் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியர்கள்: தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ உருக்கப் பதிவுThamimum Ansari mla, thamimun ansari mjk, thamimun ansari heart touching write up in facebook, தமிமுன் அன்சாரி உருக்கமான பதிவு, பிராமணரின் உடலை சுமந்து சென்ற முஸ்லிம் இளைஞர்கள், ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம், வைரல் வீடியோ, தமிமுன் அன்சார் எம்எல்ஏ, thamimun ansari write up on brahman old man body funeral by muslim youths, brahman old man body funeral by muslim youths in andhra pradesh, religious harmony, hidu muslim religious harmony, viral video, latest tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express