திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா. சாதுக்கள் மடம் மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்த விவகாரத்தில் நித்யானந்தா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது. மேலும், நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும் அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன என்றும் கூறினார். காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய 4 மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இது தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், 4 மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து, நித்தியானந்தாவின் பெண் சீடர் ஒருவர், நித்தியானந்தாவால் பொது அதிகாரம் பெற்ற நித்யா, கோபிகா, ஆனந்த் மற்றும் உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரை ஆஜராக சொல்லும்படி நீதிபதி கூறினார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நித்யானந்தா இந்தியாவில் இல்லை, அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று கூறினார். இதற்கு, நீதிபதி, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என தெரிய வேண்டும், அவரை காணொலி காட்சி மூலம் ஆஜராக சொல்லலாம் என நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், காணொலி காட்சி மூலம் அவர் ஆஜராக இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும் நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும் அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன என்றும் கூறினார். காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
'நித்யானந்தா ஆன்மீக உரைகள் சிறப்பானவை': பெண் சீடர் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து
திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா. சாதுக்கள் மடம் மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்த விவகாரத்தில் நித்யானந்தா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.
Follow Us
திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா. சாதுக்கள் மடம் மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்த விவகாரத்தில் நித்யானந்தா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது. மேலும், நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும் அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன என்றும் கூறினார். காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய 4 மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இது தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், 4 மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து, நித்தியானந்தாவின் பெண் சீடர் ஒருவர், நித்தியானந்தாவால் பொது அதிகாரம் பெற்ற நித்யா, கோபிகா, ஆனந்த் மற்றும் உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரை ஆஜராக சொல்லும்படி நீதிபதி கூறினார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நித்யானந்தா இந்தியாவில் இல்லை, அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று கூறினார். இதற்கு, நீதிபதி, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என தெரிய வேண்டும், அவரை காணொலி காட்சி மூலம் ஆஜராக சொல்லலாம் என நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், காணொலி காட்சி மூலம் அவர் ஆஜராக இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும் நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும் அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன என்றும் கூறினார். காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.