Advertisment

டி.என்.பி.எஸ்.சி பணி நியமனம்: சாதிவாரி பட்டியல் கேட்ட ராமதாஸ் மனு தள்ளுபடி

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் டி.என்.பி.எச்.சி மூலம் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களின் சாதி வாரியான பட்டியலை அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிடக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

author-image
WebDesk
New Update
Chennai High Court, PMK founder Dr Ramadoss plea, mbc reservation, டிஎன்பிஎஸ்சி, பாமக, சென்னை உயர் நீதிமன்றம், எம்பிசி, vanniyar, madras high court, pmk, tnpsc

தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் டி.என்.பி.எச்.சி மூலம் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களின் சாதி வாரியான பட்டியலை அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிடக் கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் டி.என்.பி.எச்.சி மூலம் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களின் சாதி வாரியான பட்டியலை அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில், அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு ஆஜரானார். அவர், “அரசுப் பணி நியமனங்களில் சமூக நீதியை உறுதி செய்வதற்கு இதுபோன்ற தரவு கிடைப்பது முக்கியம்” என்று கூறினார். மேலும், தமிழக அரசில் தற்போது 60 செயலாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் ஒரு நபர் கூட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. மார்ச் 1989 முதல் மாநிலத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (எம்.பி.சி) 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் இதுதான் நிலைமை.” என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், மனுதாரர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலனை சார்ந்து வாதிட்டால் மனுவை எவ்வாறு பொதுநல மனுவாகக் கருத முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதனை மறுத்த வழக்கரிஞர் பாலு, மனுதாரர் முற்பட்ட சாதிகள் உட்பட அனைத்து சமூகங்களின் நலனுக்காக போராடுபவர் என்று கூறினார்.

இது தவிர, அண்மையில் ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு, சாதி இல்லாத சமூகத்தை நோக்கி செயல்பட வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் பாலு “இந்த உயர் நீதிமன்றத்தில் பணி செய்பவர்களின் சாதி பெயர்களின் பட்டியல்கூட வெளியிடப்படுகிறது.” என்று கூறினார்.

இதற்கு, எல்லாவற்றையும் அமல்படுத்த முடியாது என்றும் இதுபோன்ற மாற்றங்கள் உள்ளிருந்து வர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

மனுதாரர் டி.என்.பி.எஸ்.சி-யில் இருந்து அரசுப் பணி நியமனங்களில் சாதிவாரியாக புள்ளிவிவரங்களை செப்டம்பர் 12ம் தேதி மனுதாரர் கேட்டுள்ளார். அதற்கு தகவல் அதிகாரி, ஆணையம் அத்தகைய தரவுகளை பராமரிக்கவில்லை என்ற அடிப்படையில் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரி அவருக்கு அளித்த பதிலில், அரசுப் பணிகளில் உள்ள மொத்த காலியிடங்களின் விவரங்களை வகுப்புகளின் அடிப்படையில் (எம்.பி.சி, பிசி மற்றும் பொதுப் பிரிவு) என்ற வகையில் மட்டுமே வழங்க முடியும். சாதி ரீதியாக வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதனால், ராமதாஸின் பொதுநல மனுவை நிராகரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) விதிகளின் கீழ் கிடைக்கக்கூடிய தீர்வுகளைப் பெறுவதற்கு மனுதாரருக்கு சுதந்திரம் வழங்கி அவருடைய மனுவை தள்ளுபடி செய்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Chennai High Court Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment