Advertisment

பள்ளி கல்வித் துறைக்கு ரூ500 அபராதம்; ஐகோர்ட் அதிரடி

நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி 6 ஆண்டுகளுக்கு பின் வழக்கு; பள்ளி கல்வி துறைக்கு ரூ.500 அபராதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School Education Department appoints special officers, special officers district wise to supervise education schemes, கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு, Tamil Nadu School Education Department, special officers in district wise to supervise education schemes

கல்வித் துறை

நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி 6 ஆண்டுகளுக்கு பின் வழக்கு தொடர்ந்த பள்ளி கல்வி துறைக்கு ரூ.500 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்ற உத்தரவை, மறு ஆய்வு செய்ய கோரி 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு தொடர்ந்த பள்ளிக் கல்வி துறைக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: திடக்கழிவு மேலாண்மை, கணக்கெடுப்பு, தூய்மைப் பணி; களத்தில் இறங்கிய மாணவர்கள்

நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட வெண்ணிலாவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பின்னரும் ஓப்புதல் அளிக்காததால், மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக மூன்று முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி கல்வித்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று 2 ஆயிரத்து 148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மனுத் தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இத்தொகையை ஒரு வாரத்தில் சட்டப்பணி ஆணைக்குழுவிடம் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment