Advertisment

இளம் வழக்கறிஞர்களுக்கு ஊதிய நிர்ணையம் : பார் கவுன்சில்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசியலமைப்பின் 21 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வாதாரத்திற்கான உரிமை, இந்த இளம் பட்டதாரிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madras High Court  questions over Kallakurichi hooch tragedy Tamil News

சென்னை உயர்நீதிமன்றம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சட்ட அலுவலகங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமான மாதந்தோறும் ரூ20,000 வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வழக்கறிஞர்கள் நல நிதித்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, ஃபரீதா பேகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நல நிதிய திட்டத்தின் கீழ் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவித்தொகையை அதிகாரித்து வழங்குவது குறித்து, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும், புதுச்சேரி காரைக்கல் வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இளம் வழக்கறிஞர்களின் ஊக்கத்தொகையை நிர்ணையம் செய்த நீதிபதிகள், சென்னை, கோவை, மதுரையை சேர்ந்த இளம் வழக்கறிஞர்களுக்கு, ரூ20 ஆயிரம் ஊக்கத்தொகையும், மற்ற நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ15 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும். இது குறித்து அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித்தொகை செலுத்துவதில் பாரபட்சம் பார்க்க வேண்டாம் என்றும் கூறியுள்ள நீதிபதிகள், "பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் ஒரு இளைய வழக்கறிஞராக இருக்கும் துன்பம் ஆகியவை இந்தத் தொழிலின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதனால் இளம் வழக்கறிஞர்கள் இந்த நிலையை 'பழகிக் கொள்ள வேண்டும்' என்று ஒரு பொதுவான பேச்சு சட்ட வட்டங்களில் உள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இழிவானது.

இளம் வழக்கறிஞர்கள் எதற்கும் பழக வேண்டிய அவசியம் இல்லை. "மாறாக, கற்றல் மற்றும் தொழிலில் வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழ்நிலையை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். இன்று இளம் வழக்கறிஞர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டும் அவர்களின் உற்சாகம் தடைபடக் கூடாது.

தொழிலில் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக பல இளைஞர்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  பல பட்டதாரிகள் தொலைதூர நகரங்களில் இருந்து மெட்ரோ நகரங்களுக்கு வருவதால், அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையில் நகரங்களில் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பின் 21 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வாதாரத்திற்கான உரிமை, இந்த இளம் பட்டதாரிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் வழக்கறிஞர்களின் சேவையைப் பயன்படுத்தியவுடன், அவர்கள் வழங்கிய சேவைகளுக்கு ஊதியம் பெறுவதற்கு அவர்கள் தரப்பில் அதன் விளைவாக உரிமை இருக்கிறது என்று நீதிபதி வலியுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Chennai High Court Puducherry tamilnadu news
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment