Advertisment

தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் இருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு கோரி மனு; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கால அவகாசம்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2018-ன் சில விதிகளில் இருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க கோரி மனு; ஜூன் 25 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

author-image
WebDesk
New Update
ஆன்லைன் ரம்மி; ப்ளேகேம்ஸ் நிறுவனம் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது; காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை உயர்நீதிமன்றம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2023 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2018-ன் சில விதிகளில் இருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிறுபான்மை பள்ளிகள் விடுத்த கோரிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 25 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து, இன்று (ஏப்ரல் 8) உத்தரவிட்டது.

Advertisment

மூத்த வழக்கறிஞர் ரெவ். சேவியர் அருள்ராஜ் மற்றும் வழக்கறிஞர் எச். மேரி சௌமி ரெக்சி ஆகியோர், பிரதிநிதித்துவம் சாதகமாக கருதப்பட்டால், பெரும்பாலான விதிகளுக்கு பள்ளிகள் தாக்கல் செய்துள்ள கோரிக்கை பயனற்றதாகிவிடும் என்று வாதிட்டதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜே. சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் முதல் டிவிஷன் பெஞ்ச் கால அவகாசம் அளித்தது.

மேலும், 2018 சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது, இது சிறுபான்மை பள்ளிகளுக்கு சட்டத்தின் அத்தகைய விதிகள் அல்லது அதன் கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகள் அல்லது உத்தரவுகளில் இருந்து விலக்கு அளிக்க அதிகாரம் அளிக்கிறது, இது மத மற்றும் மொழி சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளின் சிறுபான்மை தன்மையை பாதிக்கலாம் என்றும் வாதிடப்பட்டது.

அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் காரணமாக தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அது குறித்து எந்த முடிவையும் இப்போது அறிவிக்க முடியாது என்றும் கூறினார்.

அவரது சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதிகள், 2018 சட்டத்தின் அனைத்து விதிகளையும், 2023 ஜனவரியில் உருவாக்கப்பட்ட சட்ட விதிகளையும் எதிர்த்து பல்வேறு பள்ளி நிர்வாகங்கள் தாக்கல் செய்த 300 ரிட் மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

சிறுபான்மை பள்ளிகள் தங்களது தற்போதைய ரிட் மனுக்களில், 2018 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்டு 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான அரசியலமைப்பு உரிமையை மீறுவதாக வாதிட்டன.

தனியார் பள்ளியை நிறுவ தகுதியான அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தும் விதிகளும், தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற தகுதியான அதிகாரிக்கு கட்டுப்பாடற்ற அதிகாரமும் சிறுபான்மையினரின் உரிமைகளை புண்படுத்துவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment