Advertisment

இளையராஜா எல்லோரையும்விட மேலானவர் இல்லை: ஐகோர்ட் நீதிபதி கருத்து

இளையராஜா எல்லோரையும் விட மேலானவர் என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிட்ட நிலையில், இளையராஜா மற்றவர்களைவிட மேலானவர் இல்லை என்று நீதிபதி ஆர். மகாதேவன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Madras HC Ilaiyaraja

இளையராஜா எல்லோரையும்விட மேலானவர் இல்லை என்று நீதிபதி ஆர். மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கில், இசையமைப்பாளர் இளையராஜா எல்லோரையும் விட மேலானவர் என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிட்ட நிலையில், இளையராஜா மற்றவர்களைவிட மேலானவர் இல்லை என்று நீதிபதி ஆர். மகாதேவன் தெரிவித்துள்ளார். மேலும், எல்லோரையும்விட மேலானவர் என்று இசை மும்மூர்த்திகளான முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி ஆகியோரை மட்டுமே எல்லோரையும் விட மேலானவர்கள் எனக் கூற முடியும் என்று நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீட்சிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரி ஆகியோரை எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால, நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) எல்லோருக்கும் மேலானவர் என்று சொல்வதைக் ஏற்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி ஆர். மகாதேவன் புதன்கிழமை கூறினார். 

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முகமது ஷபீக் மற்றும் நீதிபதி மகாதேவன் அடங்கிய இரண்டாவது டிவிஷன் பெஞ்ச் முன்பு, இளையராஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், தனது கட்சிக்காரர் கடவுளுக்கு மட்டுமே கீழானவர் என்றும், எல்லோருக்கும் மேலானவர் என்றும் பதிலளித்தார்.

இதற்குப் பதிலளித்த இசையமைப்பாளரின் வழக்கறிஞர் ஏ.சரவணன், எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் அவரது பாடல்களின் காப்புரிமையைக் கேள்விக்குட்படுத்தியதால், மூத்த வழக்கறிஞர், பாடலின் காப்புரிமைத் தொடர்பான சூழலில்தான் இந்த கருத்தை தெரிவித்தார் என்று கூறினார்.

மேலும், “பத்திரிகைகள் அதை வேறு பொருளில் எடுத்துக்கொண்டன. அவர் (இசையமைப்பாளர்) ஒருபோதும் தன்னை அப்படிப் பிரகடனப்படுத்துவதில்லை என்பதை உங்களுக்கே தெரியும். அவரது உரிமையின் அடிப்படையில்தான் மூத்த வழக்கறிஞர் அந்த அறிக்கையை வெளியிட்டார்” என்று கூறிய வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரினார்.

அவரது கோரிக்கையை ஏற்று, 1970கள் மற்றும் 1990 களுக்கு இடையில் 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இயற்றிய 4,500 பாடல்களுக்கு மேல் இசையமைப்பாளரின் சிறப்பு, தார்மீக உரிமையை அங்கீகரித்து தனி நீதிபதியின் 2019-ம் ஆண்டு உத்தரவை எதிர்த்து எக்கோ ரெக்கார்டிங் விரும்பிய மேல்முறையீட்டு விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேல்முறையீட்டு மனுவின் கடைசி விசாரணையின் போது, மேல்முறையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது இந்த பாடல்களுக்கு இசை இணையதளமான ஸ்பாட்டிஃபை மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு இளையராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எக்கோ ரெக்கார்டிங் இந்த பாடல்களின் உரிமையை அந்தந்த திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே வாங்கியதாகக் கூறிய வழக்கறிஞர், தனி நீதிபதியின் உத்தரவைப் பயன்படுத்தி, அந்த பாடல்களுக்கு ஸ்பாட்டிஃபைக்கு உரிமம் வழங்குவதன் மூலம் அவர் சம்பாதித்த வருவாயின் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இசையமைப்பாளருக்கு குறைந்தபட்சம் அறிவுறுத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார்.

இருப்பினும், இசையமைப்பாளருக்கு எதிரான எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பராசரன் கடுமையாக எதிர்த்தார். நாராயண்,  “அவர் எல்லோருக்கும் மேலானவர் என்று நினைக்கிறார்” என்று கூறியபோது, பராசரன் பதிலளித்தார்:  “ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன். நான் ஆணவமாகத் தோன்றலாம், ஆனால், அதுதான் உண்மை... நான் நிச்சயமாக கடவுளுக்கு மேல் இல்லை, ஆனால், அவருக்குக் கீழே அனைவரும், நான் எல்லோருக்கும் மேலாக இருக்கிறேன்.” என்று இளையராஜா தரப்பில் பதிலளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ilaiyaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment