Advertisment

நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர்கள் விரைவில் மின்னனு மயமாக்கப்படும்: உச்சநீதிமன்ற நீதிபதி

6 லட்ச பக்கங்கள் மின்னனு மயமாக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை 2018 மார்ச்குள் முடிக்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர்கள் விரைவில் மின்னனு மயமாக்கப்படும்: உச்சநீதிமன்ற நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டிஜிட்டல் மையத் (உயர்நீதிமன்ற டிஜிட்டல் மையம் ) திறப்புவிழா இன்று நடைபெற்றது.

Advertisment

இதில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் கலந்து கொண்டு மையத்தை திறந்துவைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஆவணங்களை சேகரித்து வைப்பது மிகவும் அத்தியாவசியமானது. ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதால் இடம் மிச்சமாகும். சுப்ரிம் கோர்ட் ஆவணங்களை பாதுகாக்க டில்லியில் இருந்து 80 கிமீ தூரத்தில் ஆவண கிடங்கு ஒன்றை பார்த்தோம். அங்கு வாடகை அதிகமாக இருந்ததால் அந்த திட்டம் கைவிட்டு விட்டு, அதற்கு மாற்றாக டிஜிட்டல் முறையை பின்பற்றினோம். ஆவணங்களை ஸ்கேன் செய்து சேகரித்ததன் மூலம், ஆவணங்களை எளிதில் அனுக முடியும். பழம்பெரும் நீதிமன்றத்தின் ஆவணங்களை ஸ்கேன் செய்ய பல மாதங்களாகும். இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் அதன் பயனை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

இ- கோர்ட் முதல் அனைத்தும் மொபைல் ஆப் மூலம் தகவல் பெறலாம். ஓவ்வோரு மாநிலமும் (கர்நாடகாவைத் தவிர) இமெயில் மூலம் தகவல் பெறுகின்றன. நவம்பர் மாத இறுதியில் வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ளும் புதிய நடைமுறை அமல்படுத்தபடும். நிலுவை வழக்குகளின் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். எந்த நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை Case information system மூலம் தெரிந்து கொள்ளலாம். 10 நாட்களில் மேலும் 10 நீதிமன்றங்கள் லைவ் தகவல் பெறும் வசதி ஏற்படுத்தபடும். National judicial information Grid. அடுத்த வாரம் நீதிமன்ற தகவல்கள் Hack செய்யப்படாது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுக்கு அனுப்பப்படும். ஸ்டாம்ப் பேப்பர் கூட மின்னனு மயமாக்கப்படும். இதற்கு எஸ்பிஐ வங்கி உதவ தயாராக உள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் பெருமளவில் குறைக்பபடும். தீர்ப்பு மிகவும் தாமதமாக வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மின்னனு மயமாக்கப்படுவதால் இன்னும் இரண்டு மாதங்களில் இதில் பெரு மாற்றம் ஏற்படும்" என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,

125 ஆண்டுகால பழமையான உயர்நீதிமன்றத்தில் மின்னனு மையமாக்கப்படுவது மிகவும் முக்கியம். 10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க சுப்ரிம் கோர்ட் நீதிபதி காலிகன் தன் கையில் இருந்த சிறு மொபைல் டெப்லட் மூலம் மின்னனு முறையில் தீர்ப்புகளின் கையெழுத்திட்டார். டிஜிட்டல் மூலம் தீர்ப்புகள் மட்டுமல்லாமல் வழக்குகளின் ஆவணங்களையும் எளிதில் பெறலாம். 6 லட்ச பக்கங்கள் மின்னனு மயமாக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை 2018 மார்ச்குள் முடிக்கப்படும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment