Advertisment

ஒரே பாலின உறவு வழக்கு: தீர்ப்புக்கு முன்பு உளவியல் கல்வி கற்க முடிவு செய்த ஐகோர்ட் நீதிபதி

ஒரு தொழில்முறை உளவியல் நிபுணருடனான அமர்வு ஒரே பாலின உறவுகளை நன்கு புரிந்துகொள்ளவும் அவரது பரிணாமத்திற்கு வழி வகுக்க உதவும் என்றும் நீதிபதி கூறினார்.

author-image
WebDesk
New Update
Chennai High court judge decide to undergo psycho-education, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு பாலின உறவு, Justice Anand Venkatesh, Chennai High court, same-sex relationship case

ஒரே பாலின உறவு வழக்கு தொடர்பாக உத்தரவிடுவதற்கு முன்பு உளவியல் கல்வி கற்க செல்ல முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற நடவடிக்கை, இந்த விவகாரத்தை நன்கு புரிந்துகொள்ளவும், இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் உத்தரவை எழுத உதவும் என்றும் கூறினார்.

Advertisment

இதுபோன்ற வழக்குகளில் வழிகாட்டுதல்களை எதிர்பாக்கும் ஒரே பாலின தம்பதியினரின் மனுவைக் விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தனது சமீபத்திய உத்தரவில், “இந்த வழக்குக்கு நான் இன்னும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன்.” என்று கூறினார்.

“இறுதியில், அந்த வார்த்தைகள் என் இதயத்திலிருந்து வர வேண்டும், என் மூளையில் இருந்து அல்ல. இந்த விவகாரத்தில் நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றால் அது சாத்தியமில்லை. இந்த நோக்கத்திற்காக, வித்யா தினகரன் (உளவியல் ஆலோசனை நிபுணர்) உடன் உளவியல் கல்வி மேற்கொள்ள என்னை உட்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக வசதியான நேரத்தை குறித்து தர வேண்டும் என நான் உளவியலாளரை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

ஒரு தொழில்முறை நிபுணருடனான அத்தகைய அமர்வு ஒரே பாலின உறவுகளை நன்கு புரிந்துகொள்ளவும் அது எனது பரிணாமத்திற்கு வழி வகுக்க உதவும் என்று அவர் நேர்மையாக உணர்ந்ததாக நீதிபதி கூறினார்.

“உளவியல் கல்விக்குப் பிறகு நான் ஒரு உத்தரவை எழுதினால், அந்த வார்த்தைகள் என் இதயத்திலிருந்து வரும் என்று நான் நம்புகிறேன்” என்று நீதிபதி கூறினார். பின்னர், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஒரே பாலின உறவில் உள்ள இரண்டு பெண்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து எந்த இடையேறும் இல்லாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதற்கு முந்தைய விசாரணையின்போது, இந்த விவகாரத்தில், புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள, உளவியல் நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெறுமாறு நீதிபதி பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தற்செயலாக, கடந்த மாதம் இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு, நீதிபதி தனிப்பட்ட முறையில் சில ஆய்வுகள் செய்வதில் நேரத்தை செலவிட்டதாகவும், இந்த விவகாரம் குறித்த சரியான புரிதலுக்கு வருவதற்கு தரவுகளை சேகரித்ததாகவும் கூறினார்.

அவர் தனது உத்தரவை நிறைய ஆய்வுத் தரவுகளுடன் சேர்த்து அறிவார்ந்த உத்தரவை வழங்குவதற்காக வெளி உலகத்தால் பாராட்டலாம்.

“ஆனால், இந்த கட்டத்தில் நான் அத்தகைய ஒரு பயிற்சியில் இறங்கினால், அது என்னைப் பற்றிய பாசாங்குத்தனமாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது. இந்த உத்தரவு இந்த மிக முக்கியமான பிரச்சினையைப் பற்றிய எனது உண்மையான மற்றும் நேர்மையான உணர்வை வெளிப்படுத்தாது.

வெளிப்படையாக இருக்க, நான் இந்த பிரச்சினையைப் பற்றிய எனது சொந்த முன்முடிவுகளை உடைக்க முயற்சிக்கிறேன். மேலும், மனுதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நான் முயற்சி செய்து வருகிறேன். அதற்காக நான் நேர்மையாக முயற்சிக்கிறேன். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான உத்தரவு எழுதப்படும்” என்று நீதிபதி கூறியிருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment