இந்தியாவில் 6 உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மேகலயா நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப் மற்றும் ஹரியான உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த ரிது பஹாரி உத்திரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாவும், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி சக்ரதாரி சரண் சிங்,ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜய் பிஷ்னோய் குவாஹாட்டி அந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாவும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலி அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பணிமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளில் பெயர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 2-ந் தேி உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில், உத்தரகாண்ட் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரிது பஹாரி பொறுப்பேற்றபதன் மூலம் நாட்டில் 2-வது பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை பெற்றுள்ளார். இவருக்கு முன்பு குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுனிதா அகர்வால் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“