சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆதிகேசவலு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று முன்தினமும் நீதிமன்ற விசாரணையின் போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, தனது நீதிமன்ற அறையில் நேற்று வழக்கம் போல் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது தலை வலிப்பதாக கூறிய நீதிபதி, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஐகோர்ட் கிளை வளாகத்தில் உள்ள ஆம்புலன்சை வரவழைத்தனர்.
முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின், நீதிபதி ஆதிகேசவலு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிபதி ஆதிகேசவலு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரை பெஞ்சில் உள்ள நீதிபதிகள் மருத்துவமனைக்கு சென்றனர். மேலும், மதுரை பெஞ்சில் நீதிமன்ற நடவடிக்கைகள் நாள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டன. நீதிபதி ஆதிகேசவலு மூத்த மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இதையடுத்து, தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலுவின் குடும்பத்தினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“