/tamil-ie/media/media_files/uploads/2020/12/madurai-high-court.jpg)
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று (ஜனவரி 28) விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடினார்.
”வேங்கைவயல் சம்பவம் சாதிய மோதல் அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடக்கவில்லை. இரு நபர்கள் இடையே ஏற்பட்ட தனிமனித பிரச்னைதான் காரணம் என 2 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் புலன் விசாரணை செய்து, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்
இந்த வழக்கில், மொத்தம் 389 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 196 செல்போன்களின் தகவல்கள், 87 டவர்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் 31 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குடிநீர் தொட்டியின் மேல் நின்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள், அவர்கள் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் என அனைத்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு, குரல் மாதிரிகள் அனைத்தும் அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வீடியோவில் பேசியது அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்ணீர் தொட்டிக்கு ஏறும் வரை அதில் எவ்வித கழிவுகளும் கலக்கவில்லை. 7.35 மணிக்கு மேல் கழிவு கலக்கப்பட்டது. அந்த தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், விசாரணை நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்" என அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞரின் வாதாடினார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி நிர்மல் குமார் ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.