சமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்து
Telecast Sanskrit News and programe in regional Language : பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் நாள்தோறு சமஸ்கிருத செய்திக் தொகுப்பை 15 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும்
சமஸ்கிருத செய்திக் தொகுப்பு மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அனைத்து வைத்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்தது.
முன்னதாக, ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டெல்லி தூர்தர்ஷன் ஒளிபரப்பும் 15 நிமிட சமஸ்கிருதச் செய்தி அறிக்கையை அதே நேரத்திலோ, அல்லது அடுத்த அரை மணி நேரத்திலோ மாநில மொழி அலைவரிசைகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய சுற்றறிக்கையில் தெரிவித்தது.
இந்த சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது, ” பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் நாள்தோறு சமஸ்கிருத செய்திக் தொகுப்பை 15 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ” மனுதாரருக்கு தேவையில்லை எனில் டிவியை அணைத்து விடலாம், இல்லையெனில் வேறு சேனல் மாற்றலாம். இதனைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன” என்று கூறி வழக்கை முடித்தி வைத்தனர்.
முன்னதாக, மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன், ” தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 803 மட்டும்தான். அவர்களுக்காக சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்ப உத்தரவிடும் பாஜக அரசு உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லியில் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனரே அங்கு தமிழில் செய்தியறிக்கை வெளியிட உத்தரவிடுமா? பொதிகை தொலைகாட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். கேட்க ஐந்து ஆள் இல்லை
ஊத எதற்கு ஆறு முழ சங்கு? ” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
திமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, விசிக, மதிமுக உள்ளிட்ட பிராதான எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு கண்டனங்களை பதிவு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil