சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி டிசம்பர் இறுதியில் ஓய்வுபெறுவதால், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நீதிபதி ஏ.பி.சாஹி நவம்பர் 11, 2019 முதல் பதவி வகித்து வருகிறார். இவருடைய பணி காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைவாதல் பணி ஓய்வு பெறுகிறார். அதனால், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சஞ்ஜிப் பானர்ஜியை உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நவம்பர் 2, 1961ம் ஆண்டு பிறந்தவர். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி மற்றும் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டமும் 1983ம் ஆண்டில் பெற்றார். 1986-87 ஆண்டுகளில் சட்டம் படித்தார். நவம்பர், 1990-ல் வழக்கறிஞரகாக பதிவு செய்தார்.
கல்கத்தா உயர் நீதிமன்றம், டெல்லி, பம்பாய், ஜார்க்கண்ட், கவுஹாத்தில், ஒரிஸா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
இவர் ஜூன் 22, 2006 முதல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார் நீதிபதி சஞ்ஜிப். இவரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil