தொழிற்சாலைகளில் பயிற்சி தொழிலாளர்கள் நியமிக்க கட்டுப்பாடுகள் விதித்து கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை அமல்படுத்த கோரிய வழக்கில் ஜூலை 16ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஜவுளி ஆலைகளில் சுமங்கலி திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் திருமணமாகாத பெண்களை மூன்று ஆண்டுகளுக்கு குறைந்த ஊதியத்தில் பயிற்சி தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நடைமுறைக்கு எதிராக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஓராண்டுக்கு மேல் பயிற்சி தொழிலாளர்களாக நியமிக்க கூடாது என்றும் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு திருத்தம் கொண்டு வந்தது .
2016ம் ஆண்டு இந்த சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் மற்றும் நீதிபதி சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜூலை 16ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.