நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

1259 கோடி செலவில் ஒரு நாளைக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் டெண்டர்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி எனும் இடத்தில், 1259 கோடி செலவில் ஒரு நாளைக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் டெண்டரை ரத்து செய்யக்கோரி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ஆயிரத்து 259 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் கடந்த ஆண்டு சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளிகள் கோரியது. இந்த டெண்டருக்கு விண்ணப்பித்த 5 நிறுவனங்களை தேர்வு செய்து ராஞ்சியில் உள்ள ஆய்வு நிறுவனத்திற்கு ஆய்வுக்கு குடிநீர் வாரியம் அனுப்பியது.

இந்த ஆய்வு நிறுவனம் 5 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளையும் நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும் இரு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு நிறுவனத்தை சட்ட விரோதமாக தேர்வு செய்ய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறி சிங்க் எலக்ட்ரிகல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்த போது டெண்டரில் பங்கேற்காத இந்த நிறுவனம் வழக்கு தொடர எந்த அடிப்படை உரிமை இல்லை என்று சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close