தமிழக அரசு வாங்கும் புதிய பஸ்களில் இந்த வசதி கட்டாயம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Tamilnadu News Update : தமிழக அரசின் புதிய பேருந்து வாங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசால் இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி இல்லாத எந்த பேருந்தையும் வாங்க முடியாது என்றும், அதுபோன்ற வாங்கினால் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சட்டங்களை மீறும் செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிய பேருந்து வாங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலரால் வைஷ்ணவி ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் பொதுநலமனுவில் தமிழக அரசு ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் எம்.டி.சி-க்காக 4000 பேருந்துகள் வாங்க இருப்பதாகவும், அதில் 10% பேருந்துகள் தாழ்தள படிக்கட்டுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாகவும், 25% பேருந்துகளில், லிப்ட் பொறிமுறை அல்லது சக்கர வைத்திருப்பவர்களக்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நகரின் சாலை நிலைமையைக் கருத்தில் கொண்டு லிப்ட் பொறிமுறை உள்ள பேருந்து சென்னையில் பயன்படுத்த ஏற்றது அல்ல, என்றும், மேலும் ஊனமுற்ற ஒருவர் அத்தகைய வழிமுறையைப் பயன்படுத்தி பேருந்தில் ஏற அதிக நேரம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். இது தவிர, உயர் நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை சுட்டிக்காட்டி, அரசின் இந்த பேருந்து வாங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரியிருந்த நிலையில், நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் நீதிமன்றத்தின் சட்டம் மற்றும் உத்தரவுகளுக்கு இணங்க பொது போக்குவரத்து முறையின் ஒரு பகுதியாக புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்த பெருந்துகள் அனைத்து பயணிகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிமள்றம்,  ஏற்னவே அனுமதிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தை மட்டுமே வைத்திருப்பது போதாது என்றும் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai high court not banned tamilnadu new bus scheme

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com