அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்கூல் பேக்’ மற்றும் காலணிகளை வாங்குவதற்காக தமிழக பாடநூல் நிறுவனம் வழங்கிய ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி ஹரியானாவைச் சேர்ந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இது குறித்து மாநில அரசும் பாடநூல் நிறுவனமும் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிஎன்ஜி ஃபேஷன் கியர்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்த மனுதாரர் குறிப்பிடுகையில், தங்கள் நிறுவனம் ஒரு பெரிய தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் ஒப்பந்தப் புள்ளி கோருதலில் மிகக் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரியிருந்த போதிலும், அதனுடைய ஒப்பந்தக் கோரிக்கை எந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதிகாரிகள் எந்தவொரு சரியான காரணத்தையும் வழங்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுடைய ஒப்பந்தக் கோரிக்கயை சட்டவிரோதமாக நிராகரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுதாரர், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எஸ்.கவுல் தலைமையிலான அமர்வு, ஒப்பந்ததாரரை நிராகரிப்பதற்கான காரணத்தை தெரிவிப்பது ஒப்பந்த அழைப்பு விடுக்கும் அதிகாரிகளின் கடமை என்று தெளிவுபடுத்தியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால், தற்போதைய வழக்கில் அதிகாரிகள் இதை வேண்டுமென்றே மீறியுள்ளனர். மேலும், ஒப்பந்ததாரரை நிராகரிப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணத்தையும் வழங்க மறுத்துவிட்டதாக மனுதாரரின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசும் பாடநூல் நுறுவனமும் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"