தமிழகத்தில் ஆணவ கொலைகள் குறித்த அரசின் அறிக்கை : உயர்நீதிமன்றம் அதிருப்தி

Chennai high court : தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது, ஆணவ கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவ கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர்.

ஆணவ கொலைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம் கூட வெளியிடப்படவில்லை என குறை கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி ஐஜியை, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai high court on honour killing in tamil nadu

Next Story
அஞ்சல்துறை தேர்வு : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்Tamil Nadu Muslim Munnetra Kazagham case in chennai high court - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெயரையும், கொடியையும் பயன்படுத்தத் தடை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express