Chennai Tamil News: ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசிடமிருந்தோ, டிஜிபியிடமிருந்தோ அந்த வார்த்தை வருவதில்லை என நீதிபதி கூறியுள்ளார்.
ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கு போடப்பட்ட வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
"ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசிடமிருந்தோ, டிஜிபியிடமிருந்தோ அந்த வார்த்தை வருவதில்லை," என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
ஆர்டர்லி பயன்படுத்தும் காவல்துறை உயர் அதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது, இதற்கான உரிய நடவடிக்கையும் தேவை என்று கூறுகிறார்.
ஆடர்லில் ஒழிப்பு தொடர்பான உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை அமல்படுத்த, எடுத்த நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறுகிறது.
19 ஆர்டர்லிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளனர். 24 மணி நேரம் கூட எங்களுக்கு போதவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வரும் சுதந்திர தினத்திற்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil