Advertisment

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai High Court approve another petition against formula 4 car racing high court tamil news

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மறைந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் தண்டனையை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த 1991- முதல் 1996 வரை இருந்த அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவர் தனது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ1.15 கோடி சொத்து சேர்த்ததாக கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 2006-ம் ஆண்டு வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரங்கநாயகம் மட்டுமல்லாமல் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தானப்பாண்டியன், முருகன், அதியமான் ஆகியோரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டது. இந்த சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், விசாரணையின் முடிவில் அரங்கநாயகத்தின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ50 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது, ஆனால் அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் மகன்கள் விடுதலை செய்யப்பட்னர்.

இதனிடையே அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் மகன்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளபோதே, கடந்த 2021-ம் ஆண்டு அரங்கநாயகம், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில், தற்போது இந்த வழக்கில், நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார்.

அதன்படி, அரங்கநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தார். மேலும் அவரது மனைவி மற்றும் மகன்கள் விடுதலை செய்யப்பட்தையும் உறுதி செய்த நீதிபதி, அரங்கநாயகம் மரணமடைந்துவிட்டதால், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டு, காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment