இந்து சமய அறநிலையத்துறையால் (HR&CE) கோயில் நிதியில் நிறுவப்பட்ட சுயநிதி கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும், அப்படி நியமிக்கப்படுபவர்கள் இந்து மதத்தை ஏற்றுக்கொள்வதை நிறுத்திய தருணத்தில் பதவியை துறந்ததாகக் கருதப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னையில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பதவிக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஏ. சுஹைல் 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் தள்ளுபடி செய்தார். எந்த அரசு உதவியும் பெறாத சுயநிதி நிறுவனம், பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை வழங்குவதற்காக, 'அரசு' என்ற சொல்லின் வரையறைக்குள் வராது என்று நீதிபதி விவேக் குமார் கூறினார்.
கோயில் நிதியில் நிறுவப்பட்ட சுயநிதிக் கல்லூரி, மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் தொடர்ச்சியான செலவுகளைச் சமாளிப்பது, மதத்தின் அடிப்படையில் பொது வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் அரசியலமைப்பின் 16(1) மற்றும் (2) பிரிவுகளின் கீழ் வராது, அதற்கு பதிலாக, குறிப்பிட்ட சில மத நிறுவனங்களில் மதத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதிக்கும் பிரிவு 16(5)ன் கீழ் வரும் என்று நீதிபதி விவேக் குமார் கூறினார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார், இந்து சமய அறநிலையத்துறை HR&CE) சட்டத்தின் 10-வது பிரிவு, இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற நியமிக்கப்படும் எந்த அதிகாரியும் அல்லது ஊழியரும் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கோவில் நிதியில் நிறுவப்பட்டாலும், அது ஒரு கல்வி நிறுவனமாக மட்டுமே கருதப்படும் என்றும், மத நிறுவனமாக கருத முடியாது என்றும், அதனால் 16(1) மற்றும் (2) பிரிவுகள் பொருந்தும் என்ற மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி விவேக் குமார் நிராகரித்தார்.
சென்னை அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த முஸ்லிம் விண்ணப்பதாரர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“