Advertisment

ஐகோர்ட் கேள்விகளுக்கு துறை செயலாளர்கள், தலைவர்கள் தான் பதிலளிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்

உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும்; சென்னை ஐகோர்ட் உத்தரவு

author-image
WebDesk
New Update
Chennai high court important order to DGP, madras high court, court order to avoid Two Finger test in sexual assault case, இருவிரல் பரிசோதனை, சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு, Two Finger test, Chennai high court order to avoid in sexual assault case

சென்னை ஐகோர்ட்

உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் தான் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழக வருவாய் துறையில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஜெயராம் என்பவர், மாவட்ட வருவாய் அலுவலர் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்றது போதும், அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படியுங்கள்: மேகதாது விவகாரம்; கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் போட வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்ததால் பதவி உயர்வு வழங்கும்படி உரிமை கோர முடியாது என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு, மாவட்ட வருவாய் அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் 41 துணை ஆட்சியர்களின் பெயர்கள் இருந்த நிலையில், 10 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழக பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கத்தில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. துறையின் செயலாளர் விளக்கம் அளித்திருந்தால் நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்து இருப்பார், என்று நீதிபதிகள் கூறினர்.

இதனையடுத்து, உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணையை வருகிற 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்க வேண்டும் என பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment