அரசுத் துறைகளில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் குறித்து மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தற்காலிக ஊழியர்கள் சட்டவிரோதமாக பணியில் நீடிப்பதை ஆய்வு செய்வதை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மார்ச் 17-ம் தேதிக்குள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரால் 1980-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்ட கண்ணம்மாள் என்பவர், 1981-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒருஅரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். 23 ஆண்டுகள் அந்த பணியில் நீடித்த அவர், 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது தனது பணியை வரைமுறை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிட்ன் அடிப்படையில் அவருடைய பணி வரண்முறை செய்யப்பட்டது. அதே சமய, அவர் பணியாற்றிய காலத்துக்கான ஊதிய உயர்வு, ஊதிய பாக்கியை தரமுடியாது என்று 2008-ல் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு போட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கண்ணம்மாள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இளநிலை உதவியாளராக பணியாற்றியபோது, அவருடைய பணி வரைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தவறுதலாக அவருடைய பெயர் தமிழாசிரியர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால், ஊதிய உயர்வு பெறுவதற்கு அவருக்கு தகுதியில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இளநிலை உதவியாளர் மற்றும் தமிழாசிரியர் பணி அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட வேண்டியது. அப்படி இருக்கும்போது, இவருடைய கல்வித் தகுதியை ஆராயமல், தமிழாசிரியராக நியமித்து 23 ஆண்டுகள் பணியாற்ற அனுமதித்ததே சட்ட விரோதமானது என்று நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். அவரை 23 ஆண்டுகள் பணி நீக்கம் செய்யாமல் இருந்ததே அதிகாரிகளின் சட்டத்தை மீறிய செயல் என்று குறிப்பிட்டார். மேலும், ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை மறுத்து பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இதே போல, தற்காலிகமாக, சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று தமிழக அரசுக்கு நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.