Advertisment

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கோரி தொடர்ந்த வழக்கில், நாடு முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai hc

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவந்து நாடு முழுவதும் ஒரே விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் கனகராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கோரி தொடர்ந்த வழக்கில், நாடு முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவந்தால் அதனுடைய விலை கனிசமாகக் குறையும். அதனால், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவந்து நாடு முழுவதும் ஒரே விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் கனகராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரை மாநில அரசும் தனிப்பட்ட முறையில் வரி விதிப்பதால், குறிப்பிடத் தக்க வருவாய் அரசுகளுக்கு வருகிறது.  அதனால், பெட்ரோல், டீசல் இரண்டு பொருட்களையும் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவருவதில் மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்தை எட்டவில்லை. எனவே, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்சு மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு இப்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள். இந்த விலை குறைத்து வாங்குவதால் ஏற்படும் பலன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அந்த வகையில், பெட்ரோல், டீசலை மத்திய அரசு ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால், பெட்ரோ, டீசல் விலை 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விலை குறையும் என்று தெரிவித்தார். மேலும், பெட்ரோல், டீசல், எரிவாயு இல்லாமல் அன்றாட வாழ்க்கையை வாழ முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ரேஷன், வீட்டு வசதி, எரிவாயு என எல்லாமே இலவசமாக வழங்கப்படக்கூடிய நிலையில், டாஸ்மாக் மட்டுமதான் இன்னும் இலவசமாக வழங்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்தனர். மேலும், இது அரசினுடைய கொள்கை முடிவு என்பதால் இதில் அரசுக்கு எப்படி உத்தரவிட முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே 2020-ம் ஆண்டில் இதே போன்ற ஒரு கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரள் உயர் நீதிமன்றம், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குக்கு மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment