என்.எல்.சி கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக, கரிவெட்டி மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை 26ம் தேதி வளைமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியது அந்நிறுவனம். இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் வாய்க்கால் வெட்டப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முருகன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி பாமக வழக்கறிஞர் பாலு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்தது.
இந்நிலையில் என்.எல்.சி கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil