Advertisment

விஷசாராய சம்பவத்திற்கு பின் கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு பிறகு கல்வராயன் மலை மக்களின் நிலை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai High Court approve another petition against formula 4 car racing high court tamil news

சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்குக்கு தொடர்புடையதாக கூறப்படும் கல்வராயன் மலைவாழ் மக்களின் நிலை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

வட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 67 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிலர் கவலைக்கிடமான நிலையில் இருந்து உயிர் பிழைத்திருந்தனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த பலர் இந்த சம்பவத்தின் மரணமடைந்தனர்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவருமே பணி மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் வழங்கப்படும் தண்டனையில் மாற்றம் செய்யப்பட்டு சட்டசபையில் புதிய சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை 11-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், கள்ளச்சாராயம் மலைப்பகுதிகளில் தான் காய்ச்சப்படுவதாகவும், அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் இல்லாததால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைகிறதா? மக்களின் வாக்குகளை பெற்றபின் அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள், அரசின் திட்டங்கள், சலுகைகள் சென்றடைகிறதா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்திற்கு, பிறகு, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை நிலை குிறத்து விசாரித்துள்ள நீதிபதிகள், இத்தனை ஆண்டுகள் ஆட்சியர், ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும், ஜூன் 24-ந் தேதி கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment