Advertisment

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைப்பு; நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டம்!

தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டி.ஜி.பி-யிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிடும்படி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர்; அண்ணாமலை உதவியாளர் கைது

மனுவில், மற்ற மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை, என கூறப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ​​காவல்துறை தரப்பில் எந்தப் பாதையில் செல்கிறது எனத் தெரிவிக்கப்படவில்லை. ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது., காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும். இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருப்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது, இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது. ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாம் ஆனால் அனுமதி மறுக்க முடியாது.தமிழகத்தில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிறன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல, நாங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் மனுதாரர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறிப்பிட்ட இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் தாமதம் ஆவதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மேலும் அணிவகுப்புக்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment