Advertisment

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நான்கு வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HC order on vice chancellor, registrar jobs for tribes - துணைவேந்தர், பதிவாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பிரதிநித்துவம்... 2 மாதங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

HC order on vice chancellor, registrar jobs for tribes - துணைவேந்தர், பதிவாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பிரதிநித்துவம்... 2 மாதங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஆயுதப்படை காவலர்கள் ராம்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட 157 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அதில் தங்களுக்கு பணி உயர்வு வழங்கும்போது, ஊதிய முரண்பாடு உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு ஜூனியராக உள்ளவர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள், எனவே எங்களின் பணிவரன்மு றையில் குளறுபடி உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா மனுதாரர்களின் கோரிக்கையை பரீசிலித்து ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஆயுதப்படை காவலர்கள் 157 காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு நீதிபதி டி. ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நான்கு வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment