சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் இடையே உள்ள லூப் ரோட்டில் மீன் கடைகளை வரிசையாக வைத்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து பாதிப்படைகிறது என்று அவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு கொண்டுவருமாறு, பதிவாளருக்கு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டார்.
லூப் ரோட்டில் பல மீன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அவ்வழி சாலையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நேரங்களான - (காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை) ஆகிய நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மீன் கடைகளை முறைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாலையின் வடக்குப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், மாநகராட்சியின் வாதத்தை ஏற்காத நீதிபதிகள், போக்குவரத்தை பாதிக்கும் கடைகளை அகற்ற உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil