திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை மீட்க வலியுறுத்தியும் மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படியுங்கள்: நிலம் கையகப்படுத்திய விவகாரம் : தமிழக அரசு மற்றும் என்.எல்.சி-க்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
இந்த மனு இன்று (திங்கட்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்களைக் கண்டறிந்து, அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில், அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil