கூடுதல் கட்டிடம் கட்ட மரங்களை வேறு இடங்களில் நட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Chennai high court : சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட அங்குள்ள மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நடுவதற்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By: WebDesk
Updated: December 18, 2019, 12:42:56 PM
Tamilnadu local body election live Updates
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட அங்குள்ள மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நடுவதற்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
உலகிலேயே மிக பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது.
இந்த மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 75 மரங்களில் பெரும்பலானவை வயதான மரம் என்பதால் அவை வேறு இடத்திற்கு மாற்றினால் மீண்டும் துளிர்ப்பதற்கு 20 முதல் 30 சதவீத வாய்ப்புகள் மட்டும் இருப்பதாகவும், அதனால் 75 மரங்களில் குறைந்தபட்ச மரங்களை மட்டும் இடம் மாற்றம் செய்ய இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
இதனையடுத்து, மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நட அனுமதியளித்த நீதிபதிகள், அதற்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் நிலை குறித்தும், புதிய மரங்கள் நடப்பட்டது குறித்தும் 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.