Advertisment

நளினி, முருகன் வாட்ஸ்அப்பில் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை? ஐகோர்ட் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் வாட்ஸ்அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajiv Gandhi assassination case, Rajiv Gandhi Murder case, rajiv gandhi mureder case inmates Nalini, சென்னை உயர் நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கு, நளினி, நளினி முருகன், முருகன், நளினி வாட்ஸ் அப் மூலம் உறவினர்களுடன் பேசுவதில் என்ன பிரச்னை, Murugan, Nalini Murugan, Chennai High Court questions at govt, HC asks what problem nalini murugan speak with their relations through whats app, whats app,

Rajiv Gandhi assassination case, Rajiv Gandhi Murder case, rajiv gandhi mureder case inmates Nalini, சென்னை உயர் நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கு, நளினி, நளினி முருகன், முருகன், நளினி வாட்ஸ் அப் மூலம் உறவினர்களுடன் பேசுவதில் என்ன பிரச்னை, Murugan, Nalini Murugan, Chennai High Court questions at govt, HC asks what problem nalini murugan speak with their relations through whats app

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் வாட்ஸ்அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மேலும், முருகன் லண்டனில் உள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பினர். நாளை மறுதினம் பதிலளியுங்கள் நாளை மறுதினமே உத்தரவை பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Chennai High Court Rajiv Gandhi Nalini Murugan Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment