Advertisment

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் எம்.டி.எம்.ஏ செயல்பாட்டில் உள்ளதா? ஐகோர்ட் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் எம்.டி.எம்.ஏ விசாரணை அமைப்பு இன்னும் செயல்பட்டில் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு வழக்கறிஞர் நடராஜன் விசாரணை அமைப்பு இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.

author-image
WebDesk
New Update
Tamil News Today Live

Tamil News Today Live

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் எம்.டி.எம்.ஏ விசாரணை அமைப்பு இன்னும் செயல்பட்டில் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு வழக்கறிஞர் நடராஜன் விசாரணை அமைப்பு இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் எம்.டி.எம்.ஏ விசாரணை அமைப்பு இன்னும் செயல்பட்டில் உள்ளதா, அதன் நிலையை அறிந்துகொள்ள விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு அரசு வழக்கறிஞர் நடராஜன், அந்த விசாரணை அமைப்பு இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்றும் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சதித்திட்டங்களைக் குறித்து விசாரிக்க, ஜெயின் கமிஷன் அறிக்கைக்கு பிறகு, சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்ட பன்னோக்கு கண்காணிப்பு அமைப்பு (எம்.டி.எம்.ஏ) நிலையைப் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்பியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர்களில் ஒருவரான பேரறிவாளன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு 90 நாட்கள் சிறை விடுப்பு (பரோல்) வழங்கக் கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபகரன், வி.எம்.வேலுமணி அமர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் எம்.டி.எம்.ஏ அமைப்பு இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.நடராஜன் நீதிமன்றத்தில், எம்.டி.எம்.ஏ விசாரணை அமைப்பு இன்னும் செயலில் உள்ளது என்றும் அது தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்த விசாரணை குறித்து எம்.டி.எம்.ஏ தாக்கல் செய்த அறிக்கையை உச்சநீதிமன்றம் 2018 மார்ச் மாதம் கவனித்ததாக அவர் கூறினார். அந்த அறிக்கையில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் மக்களை விசாரிக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் ஆர்.பானுமதி (ஓய்வு பெறுகிறவரைக்கும்), மோகன், எம். சாந்தனகவுடர் அமர்வு, விசாரணை அமைப்பு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும்படி மத்திய அரசிற்கு அறிவுறுத்தியது. மேலும், நீதிபதிகள் அமர்வு எம்.டி.எம்.ஏ.வின் விசாரணையை முடிந்தவரை விரைவாக முடிக்க இராஜதந்திர வழிகள் மூலம் தொடங்கப்படலாம் என்று தெரிவித்தது.

அரசு வழக்கறிஞரின் பதிலைத் தொடர்ந்து, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

மாநில அரசு தொழில்நுட்பங்களைப் பற்றி கூறுவதும் மற்றும் குற்றவாளிக்கு உடல்நலக்குறைவு இருந்தபோதிலும் விடுப்பு வழங்க மறுப்பது குறித்து நீதிபதிகள் அமர்வு தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court Perarivalan Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment